“நான் இன்னும் SINGLE AND AVAILABLE – தான்” – 4வது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் !

407

வனிதா விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார்.

பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர்.

அதன் பிறகு கடந்த வருடம் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள். அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 4 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த வனிதா, “நான் இப்போது SINGLE AND AVAILABLE, தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று பதிவு செய்துள்ளார்.