ஒரு போட்டோ போட்டது குத்தமா.? குக் வித் கோமாளி பவித்ராவை புரட்டியெடுத்த நெட்டிசன்கள்!

439

பவித்ரா லட்சுமி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

இவர் கடந்த சில வருடங்களாகவே யூட்யூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடியும் நடித்தும் வந்தார். அப்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை பார்த்த விஜய் டிவி இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்த்தது.

அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது நடிகையாக வலம் வரவுள்ளார். பவித்ரா லட்சுமியை பார்க்கும் போதே அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

திடீர் என்று ஏற்பட்ட விபத்தினால் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். எப்போதுமே சிரித்து மகிழும் பவித்ரா லட்சுமியின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகமா.

சமீபத்தில் பவித்ரா ‘Take Me Up’ என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை வெளியிட்டார், இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.