சன் டிவியில் சாமி சீரியலில் நடித்துள்ள நிவேதா தாமஸ்.. வைரல் புகைப்படம்!!

612

நிவேதா தாமஸ்..

தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கலக்கிக் கொண்டு வருவர் நிவேதா தாமஸ். 25 வயதில் தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நிவேதா தாமஸுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை குருவி என்ற படத்தில் தளபதியுடன் நடித்திருப்பார். அதற்குப் பின்னர் வெளிவந்த போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் பாபநாசத்தில் கமலஹாசனுடன் நடித்த நிவேதா தாமஸுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்தின் நடிப்பை வைத்து தான் தர்பார் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவரே தெரிவித்திருப்பார்.

2021-ல் வெளிவந்த வக்கீல் சாப் என்ற படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாத நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் கலக்கி வருகிறார். சன் டிவியில் பிரபல சீரியல் நடித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2000-ல் ராஜராஜேஸ்வரி என்ற சீரியலில் நடித்து உள்ளார் நிவேதா தாமஸ். அதுமட்டுமில்லாமல் மை டியர் பூதம், சிவமயம் போன்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..