“தமிழ் சினிமா தவறவிட்ட நடிகை” வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணாவா இது..?

467

சொர்ணா மாத்யூ..

சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் ஆன கங்கா என்னும் பெயரை மறந்தாலும் அந்த படத்தில் வரும் வடிவேலு மனைவியின் கதாபாத்திரத்தின் பெயரான சொர்ணாவும், அவரின் அழகையும் மறந்திருக்க முடியாது அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டார்.

இவரின் உண்மையான பெயர், சொர்ணா மாத்யூ ஆகும். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழி படங்களில் ஒரு ரவுண்டு வந்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு ஜேக்கப் என்னும் தொழிலதிபரை மணந்து கொண்டார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் சந்திரமுகி. அதோடு தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு மலையாள படங்களில் நடித்தவர் இப்போது அமெரிக்காவில் நல்ல முறையில் செட்டிலாகிவிட்டார் இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,சந்திரமுகி படத்தில் “வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சொர்ணா-வா இது..?, தமிழ் சினிமா தவறவிட்ட சந்தன கட்டை” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.