காயத்ரி யுவராஜ்..
லாக்டவுன் காலம் என்பதால் நாடக தொடர்களின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருக்கிறது. அதை ஈடுகட்டும் விதமாக தற்போது சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் போட்டோ, வீடியோ என தங்களை ரசிகர்களிடம் அப்டேட் ஆக வைத்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது காயத்ரி யுவராஜின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.
நடிகை மட்டுமில்லாது சிறப்பாக நடனம் ஆடக் கூடிய காயத்ரி, மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.
பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது நாடகங்களில் நடிக்கும் கதாநாயகிகளை விட வில்லிகளுக்கே அதிகமாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தனது கணவரான டான்ஸ் மாஸ்டர் யுவராஜ் உடன் சேர்ந்து இன்னா மயிலு பாட்டுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்டைலிஷான சட்டை, பேண்ட் அணிந்து வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது மாடர்ன் மயிலு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
https://www.instagram.com/stories/highlights/17998008742330710/