சாஹீன் கான்..
சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய்க்கு இன்று கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இப்போது அவர் இருக்கும் Range இல் பிகில், மாஸ்டர் போல சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள், இவர் மீது தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்தநிலையில் விஜய் நடித்து, கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘யூத்’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாஹீன் கான் நடித்திருந்தார்.
இவர் மும்பையை சேர்ந்தவர் தமிழை நன்றாக பேசக்கூடியவர், ஏன் என்றால் இவர் குடும்பம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். நடிகை சாஹீன் கான் யூத் படத்திற்க்கு பிறகு அவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதாபாத்திரம் வேண்டும் என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்.
அதற்கு பின்னர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பின் வழக்கம் போல மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து விட்டார். பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் யூத் படத்தில்தான் இயக்குனர் மிஷ்கின் வின்சன்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..