சிம்பு..
கொரானா தொற்று சமயத்தில் பல நெகட்டிவ் விஷயங்கள் நடந்துள்ளது. இது நாம் அனைவரும் அறிந்ததே . ஆனால் பாசிட்டிவ் சேஞ் ஓவர் கொடுத்தவர் சிம்பு என கூட சொல்லலாம். உடம்பை குறைத்தார். தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் மாறுதல்கள் நிறைய உள்ளது என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
ஈஸ்வரன் ரிலீசுக்கு பின் மாநாடு, பத்து தல என அடுத்தடுத்து உள்ளது படங்கள். இந்நிலையில் சிம்பு இன்டர்நேஷ்னல் நிகழ்ச்சியான Survivor 2021 ஷோவை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 40 சீசன் கடந்த நிகழ்ச்சி அது.
16 போட்டியாளர்களை கொண்டு சென்று ஒரு தீவு போன்ற சூழலில் விட்டுவிடுவார். அங்கு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும், எலிமினேஷன் நடக்கும், இறுதியில் இருக்கும் கடைசி நபர் தான் வெற்றியாளர். சுமார் 90 – 100 நாட்கள் ஆகும்.
ஏற்கனவே 2012 இல் சமீர் கோச்சர் தொகுத்து வழங்க ஒரு சீசன் ‘Survivor India ‘ என பிலிப்பைன்ஸ் தீவில் நடந்து. இம்முறை தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்தது, சிம்பு தரப்பு ஓகே சொல்லிவிட்டார்கள். நம் வெர்ஷனில் சினிமா, டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்கள் என்கின்றனர்.
ஆக பிக் பாஸ் கமல், master chef விஜய் சேதுபதி போல survivor சிம்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.