பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கப்போவது இவர் தான்.. சொன்னது யாருனு பாருங்க!!

855

பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கப்போவது இவர் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு தான் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே தர்ஷன் தான் டைட்டிலை வெல்வார் என்று பேசி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசன் போட்டியளரான நடிகை சுஜா வருணியின் கணவர் சிவக்குமார்.. முகேன் ராவ் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில், எனக்கு என்னவோ முகென் ராவ் தான் சத்தமில்லாமல் டைட்டிலை வெல்லப் போகிறார் என்று தோன்றுகிறது. நாளுக்கு நாள் அவர் ரசிகர்களை கவர்ந்து கொண்டே போகிறார். அவரின் செய்கைககள் ரசிக்கும்படி உள்ளது. எனக்கு ஏற்கனவே மலேசியாவை பிடித்துள்ளது. முகென் ராவ் மீதான பாசத்தால் மலேசியாவை மேலும் பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு கவின் ரசிகர் ஒருவர் டைட்டில் கவின் தான் வெல்வார் என்று கூறியுள்ளார். அதை கண்ட சிவக்குமார் கண்களில் க ண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பது போன்ற ஸ்மைலியை போட்டுள்ளார்.