“போடுறா வெடிய…” தளபதி பிறந்தநாளில் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ் ! சோகத்தில் அஜித் ரசிகர்கள் !

513

தளபதி 65…

மாஸ்டர் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்த இருந்தார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது தளபதி 65 பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு,

அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் பரவியுள்ளது. இந்த நிலையில், வரும் 22 – ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்களின் நிலைதான் நாளுக்கு நாள் பரிதாபமாக போய்க்கொண்டிருக்கிறது.