அஷ்வின்..
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. இந்த நிகழ்ச்சியில் இளம் ரசிகைகளை கவரும் வண்ணம் போட்டியாளராக வந்தவர் அஷ்வின்.
இவர் படங்களில் சின்ன சின்ன வேடம், சில சீரியல்கள், குறும்படங்கள் என நடித்திருக்கிறார், ஆனால் சினிமாவில் பெரிய ரீச் இவருக்கு கிடைக்கவில்லை.
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இதில் கலந்துகொண்டு மக்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
நிகழ்ச்சி முடித்த கையோடு படங்களில் கமிட்டாகி வருகிறார். திடீரென அஷ்வின் தாடி-மீசை அதிகம் வளர்ந்து லுங்கி, சட்டையில் மாஸ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஹேன்சம் அஷ்வினா இது, ஆளே மாறிவிட்டாரே இந்த லுக்கும் சூப்பர் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram