“தலைவர் செம்ம மாஸ்” ரீலீஸ் தேதியோடு அண்ணாத்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு !

418

அண்ணாத்த..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மாஸ்ஸான லுக்கில் ரஜினியை பின்புறத்தில் காட்டியுள்ளனர். மேலும் அண்ணாத்த (04.11.2021) தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்றும், பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.