விஜய் சேதுபதியுடன் ஜோடி போடும் தமன்னா.. சின்னத்திரையில் கல்லா கட்ட போகும் மாஸ்டர் பவானி!

471

விஜய் சேதுபதியுடன்..

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து வேடங்களிலும் பட்டையை கிளப்பி வரும் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.

சர்வதேச அளவில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோதான் ‘மாஸ்டர் செஃப்’. ஏற்கனவே வட இந்திய சேனல்களில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய ஹிட்டடித்துவிட்ட நிலையில், தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளனர். சமீபத்தில் இதற்கான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் மாஸ்டர் செஃப் தெலுங்கு ஆகிய நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விரைவில் இதனுடைய ஒளிப்பரப்பு குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் ரசிகர்களிடம் இந்நிகழ்ச்சிக்கு தனி கவனம் கிடைத்துள்ளது.

தனது அசாத்திய நடிப்பு மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். நீங்க கலக்குங்க பாஸ்.