சிம்புவின் படத்தை புரமோஷன் செய்யும் சிவகார்த்திகேயன்!

460

சிம்புவின்..

சிம்பு நடித்த படத்தை புரமோஷன் செய்ய சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவான ’மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை அதாவது ஜூலை 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ’மஹா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் ’மஹா’ படத்தின் டீஸரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார்.

மேலும் ’மஹா’ படத்தின் நாயகியான ஹன்சிகாவுக்கு இது ஐம்பதாவது படம் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரானுக்கு இந்த படம் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சனம்ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன், விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மதி ஒளிப்பதிவும் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை யூ.ஆர்.ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.