‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக சென்னை வந்தார் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ!

466

பூஜா ஹெக்டே..

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் அதற்கான செட் அமைக்கும் பணியும் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் நடைபெற உள்ள ’பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக நாயகி நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் பூஜா ஹெக்டே நடந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் வெள்ளி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.