“ஹன்சிகாவுடன் நெருக்கமான காட்சியில் சிம்பு” – வைரலாகும் மஹா படத்தின் டீஸர்!!

480

மஹா படத்தின் டீஸர்..

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தனர். ஆனால் அந்த படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அந்த காதல் முறிவுக்கு தானோ, ஹன்சிகாவோ காரணம் இல்லை என்றார் சிம்பு.

சொல்லப் போனால் ஹன்சிகாவுடனான காதல் முறிந்ததில் சிம்புவுக்கு மனவருத்தம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வை. யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஹன்சிகாவின் காதலராக, விமானியாக நடித்திருக்கிறார் சிம்பு. கௌரவ தோற்றம் என்று முதலில் தெரிவித்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்தின் காரணமாக சிம்புவின் கதாபாத்திரத்தை விரிவுபடுத்திவிட்டார் ஜமீல்.

இந்த படத்தின் டீஸர் தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். டீஸரில் “எனக்கு வர பிரச்சனைக்கு எல்லாம் காரணமே நான் உண்மையா இருப்பதுதான்” என்று சிம்பு பேசும் பஞ்ச் டயலாக் மிகப்பெரிய பிரபலமாக வாய்ப்பிருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ஹன்சிகாவுடனான படுக்கையறை காட்சி ஒன்று இருப்பதாக தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வந்தது அதை இந்த டீஸரில் காணமுடிகிறது.