சிம்பு..
சில மாதங்களுக்கு முன், நடிகர் சிம்பு ஜிம்மில் ஜாலியாக Coach-ஐ திட்டுவது போல video ஒன்று வந்து செம்ம வைரல் ஆனது.
அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து படத்தை எதிர்பார்த்தால், நம்ம ஆளு ஒரு வீடியோவையும் போட்டோவையும் ரீலீஸ் செய்து விடுகிறார் என்கிற விமர்சனங்களை கொஞ்சம் கொஞ்சமா உடைத்துவிட்டார்,
சமீபத்தில் மாநாடு படத்தின் சிங்கிள் ரீலீஸ் ஆகி எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு… விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர், அஜித் பாணியில் சிம்புவும் சமைக்க ஆரம்பித்துவிட்டார்,
வீட்டில் உள்ள அனைவருக்கும் சிம்புதான் சமைத்து தருகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று Release ஆகியுள்ளது. அதில் மீண்டும் சிம்பு ரொம்ப Fit ஆக காட்சியளிக்கிறார்.
அந்த வீடியோவில் சிம்பு ஷேவ் செய்துவிட்டு கெட்டவன் பட Look-இல் Paneer சமைத்துக் கொண்டே இருக்க, உடனிருக்கும் நண்பர் அவரை தொல்லை பண்ணும்படி கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது செம்ம வைரல்.
View this post on Instagram