லாஸ்லியா…
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார், அதனை தொடர்ந்து லாஸ்லியா ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா ப்ரெண்ட்ஷிப் படத்தில் ஒரு சூப்பர் விஷயத்தை செய்துள்ளார். ஆம் அவர் இப்படத்தில் முதல்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
மேலும் இப்பாடலை லாஸ்லியா இசையமைப்பாளர் தேவாவுடன் சேர்ந்து பாடியுள்ளார். அந்த பாடல் இன்று மதியம் 12.00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.