BB ஜோடிகளில் இருந்து வனிதாவின் அதிரடி விலகலுக்கு ரம்யா கிருஷ்ணன்தான் காரணமா?

542

வனிதாவின்…

போன லாக்டவுன் காலத்தில் வனிதா விஜய்குமாரை சுத்தி சுத்தி வந்து கண்டென்ட் மெட்டீரியல் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் அவரை கண்டென்ட்டாக மாற்றி விட்டார்கள்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். எதனால் இந்த முடிவை எடுத்ததாக வனிதா கூறுகையில்,

“பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பெண்களுக்கு ஆண்களால் மட்டுமில்லாமல் பெண்களாலும் கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது.

பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள். சீனியர் இப்படி நடந்து கொள்வது அ.தி.ர்ச்.சியாக உள்ளது க்ன கூறினார். யார் அந்த சீனியர் என்று மக்கள் தேட, கமெண்ட்டுகளில் அந்த நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அவரிடம் கேட்டால், “இதுகுறித்து அவரிடமே கேட்டுகொள்ளுங்கள், என்னை பொறுத்தவரை இது ஒரு விஷயமே இல்லை. இதை பற்றிய எனது பதில், நோ கமெண்ட்ஸ் தான்” என்று கூறிவிட்டார்.