அதற்குள் ‘பீஸ்ட்’ சிங்கிளா? துள்ளி குதிக்கும் விஜய் ரசிகர்கள்!

542

பீஸ்ட்..

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை,

அடுத்து பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது என்பதும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு பணிகள் நடைபெற்று வரும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடல் ஒலிப்பதிவு முடிந்து விட்டால் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் 15ல் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பீஸ்ட்’ படப்பிடிப்பு பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் என ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.

‘பீஸ்ட்’ சிங்கிள் பாடல் குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்..