குக் வித் கோமாளி, அஸ்வினுக்கு ஜோடியாக இந்த நடிகையா.. விபரம் உள்ளே!

689

அஸ்வின்..

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது தனது அறிமுக படத்தில் நடிக்கவுள்ளார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஹரிஹரன் இயக்கவுள்ள இப்படத்தில், அஸ்வினுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்க, இளம் நடிகை தேஜ் அஸ்வினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

சமீபத்தில் இணையத்தில் பெரும் வைரலான ‘அஸ்கு மாரோ’ பாடலில் கவினுடன் நடனமாடியவர் தேஜ் அஸ்வினி என்பது குறிப்பிடத்தக்கது.