இவங்க கூட நடிக்குறது ரொம்ப கஷ்டம்.. பிகில் மேடையில் விஜய் குறிப்பிட்ட இரண்டு நடிகர்கள்!!

822

பிகில் மேடையில் விஜய்..

நேற்றைய பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பற்றித்தான் அவரது ரசிகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது அவரது பேச்சு.

விழாவில் ஒரு மீம் விஜய்க்கு போட்டு காட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆன பிரெண்ட்ஸ் நேசமணி பற்றிய மீம் தான் அது. இதை பார்க்கும்போது என்ன தோணுது சார் உங்களுக்கு என தொகுப்பாளர் ரம்யா கேட்டார்.

“இதை பார்க்கும்போது என்ன தோணுதுன்னா, ஒரு ஆணியும்…(ரசிகர்கள் ஆரவாரம்). அந்த சீன் எடுக்கும்போது நான் சிரித்துக்கொண்டே தான் இருந்தேன். சூர்யா வந்து சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிகிட்டார். என்னால முடியல. வடிவேலு சார் கூட, விவேக் சார் கூடலாம் நடிக்குறது ரொம்ப கஷ்டம்ங்க. என்னோட பேவரட் படங்கள்ல பிரெண்ட்ஸ் படமும் ஒன்னு” என விஜய் பதில் அளித்துள்ளார்.