ரீ எண்ட்ரி கொடுக்கும் அசின்!
‘உள்ளம் கேட்குமே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் விஜய், அஜித்,கமல், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர், கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதிலிருந்து அசின் இனிமே படத்தில் நடிக்கமாட்டார் என்று வதந்தி பரவியது. ஆனால் வடிவேலு பாணியில் எனக்கு எண்டே கிடையாது என்று மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை உறுதிசெய்யும் வகையில் அவர் மிகவும் கவர்ச்சியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பாலிவுட்டா? அல்ல கோலிவுட்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.