சும்மாவே TREND பண்ணுவோம்.. தளபதி சொன்னா விடுவோமா? TREND ஆகும் மரண ஹேஷ் டேக்!!

815

TREND ஆகும் ம ரண ஹேஷ் டேக்!!

தளபதி விஜய்க்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே போவது அனைவரும் அறிந்த ஒன்றே. தளபதி சொல்வதை அப்படியே கேட்டு அதைப் பின்பற்றுவது தளபதி ரசிகர்கள் வழக்கம். தளபதி எதை செய்யச் சொன்னாலும் அதை அப்படியே செய்வதில் அவரைப்போலவே தளபதி ரசிகர்களும் கில்லி தான்.

தளபதி விஜய் ”பிகில்” ஆடியோ வெளியீட்டு விழாவில் ”பேனர் விழுந்து இ றந்த சுபஸ்ரீ பற்றி பேசினார். இதில் ஆன்லைனில் தேவையில்லாத விஷயங்களை ட்ரெண்ட் பண்ணுவதற்கு பதிலாக சுபஸ்ரீ இ றந்ததைத் பற்றி ட்ரெண்ட் பண்ணலாமே,. ஒரு நியாயம் கிடைக்குமே”என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை செய்தார். சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு தரப்பு நடந்துகொண்ட விதம் கேவலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

இதைப்பற்றி தளபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது கூட அனைவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறி வந்தவர், விஜய். பொதுவாக சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுப்பவர், பேனர் விஷயத்தில் ஏன் மௌனம் காக்கிறார்? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. அதனை நேற்றைய மேடையில் பொதுமக்களின் முன்னிலையில் அவர் பேசியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

இதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தளபதி ரசிகர்கள் இன்று,#JusticeforSubhashree என்ற hashtag உருவாக்கினார். மற்ற நடிகர்களின் ரசிகர்களும் சுபஸ்ரீக்கு ஆதரவாக இந்த hashtag பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர்