3 பிரிவுகளில் வழக்கு: கைதாகுகிறாரா பானுப்ரியா?

978

கைதாகுகிறாரா பானுப்ரியா?

பானுப்ரியா வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார்.அந்த சிறுமியின் தாயார் பிரபாவதி கடந்த ஆண்டு தன்னுடைய மகளை பானுப்ரியா மற்றும் அவரது சகோதரர் கோபால கிருஷ்ணன் கொடுமைப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சமல்கோட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே பானுப்ரியா அந்த சிறுமி மற்றும் தாய், தன் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த கை கடிகாரம் போன்றவற்றைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த சிறுமியின் தாயார் ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கொடுத்த புகார் தகவலை அம்மாநில போலீசார் சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதையடுத்து பானுப்ரியா மீது பாண்டி பஜார் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுமியை வேலைக்கு சேர்த்தது, அவரை காயப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பானுப்ரியா கைது செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.