கல்யாணம் வேண்டாம் மம்மி : அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

1263

அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

நல்ல அழகும், நடிப்புத் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்றும் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட வெயிட் போடவில்லை. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அவ்வளவு அக்கறை.

நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா ஆசைப்படுகிறார். ஆனால் எப்பொழுது கல்யாணப் பேச்சை எடுத்தாலும் வேண்டாம் மம்மி என்கிறாராம் நடிகை. கல்யாணம் என்றால் இந்த பெண் ஏன் இப்படி பயப்படுகிறது என்று வியக்கிறாராம் நடிகையின் அம்மா.

நடிகையின் வாழ்வில் வந்த காதல் நிலைக்கவில்லை. பல ஆண்டுகளாக காதலித்த அந்த நபர் பிரிந்துவிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட காதலும் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. இப்படி அடுத்தடுத்து மனவேதனை அடைந்ததால் நடிகை திருமணத்தை வெறுக்கிறாரோ என்னவோ.

என்னால் தனியாக வாழ முடியும் என்று நடிகை நம்பிக்கையுடன் சொன்னாலும் அவரை திருமதி ஆக்கிப் பார்க்கத் துடிக்கிறாராம் அம்மா. கொஞ்சம் டல்லடித்த நடிகையின் கெரியர் வெற்றி நாயகனின் படத்தில் நடித்த பிறகு சூப்பராக பிக்கப் ஆகிவிட்டது.

கெரியர் நல்ல நிலைக்கு வந்ததாலும் நடிகைக்கு திருமணம் மீது ஈடுபாடு இல்லாமல் உள்ளது. முன்பு போன்று இல்லாமல் தற்போது வெயிட்டான கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.