அஷ்வின்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து மூன்றாவது இடத்தை பிடித்தது மட்டுமின்றி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் அஷ்வின்.
மேலும் அஷ்வின் விரைவில் தமிழ் சினிமாவிற்கு என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் அஷ்வின் மற்றும் ரெபா மோனிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஆல்பம் சாங் தான் குட்டி பட்டாஸ்.
சென்சேஷனல் ஹிட்டான இப்பாடல் தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் அஷ்வினின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.