சூர்யா..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் சூர்யா நடித்து முடித்துள்ள பீம் ஜி திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது, இதன் போஸ்டர்களும் பெரிய வைரலானது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரசிகர்கள் சிலர் சூர்யாவின் அயன் பட காட்சிகளை தத்ரூபமாக ரீமேக் செய்திருந்தனர்.
அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சூர்யா ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார், அதில் “வாழ்க்கையிலே சாதிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு எதுவுமே தடையா இருக்க முடியாதுன்னு ஒரு மெசேஜ.
இப்ப இருக்க இளைஞர்களுக்கு நீங்க சொல்லிருக்கீங்க, All the best Little Brothers” என அவர்களுக்கு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.