நடிகை ரூபிணி
புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த “கூலிக்காரன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரூபிணி. இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ரூபிணி ரஜினி, கமல், மோகன், சத்யராஜ், தியாகராஜன், பிரபு என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்.
உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் “ஒரு மைனா மைனா குருவி மனஸோரம்” என்ற பாடலுக்கு நடனம் ஆடி அனைத்து இளைஞர்கள் மனதையும் கிறங்கடித்தவர்.அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் நடித்த சில படங்களிலே மக்கள் மனதை பிடித்தவர்.
ரூபிணிக்கு தற்போது 49 வயதாகிறது. இவருக்கு 14 வயதில் அனிஷா ராயணா என்ற மகள் இருக்கிறார். ரூபிணி மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
மேலும் விரைவில் ஒரு சில படங்களில் இவர் கமிட் செய்யப்படலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரூபிணி மகள் அனுஷாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.