கணவரைப் பற்றி நடிகை குஷ்பூ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!

1066

நடிகை குஷ்பூ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..

1980 முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் நடிகை குஷ்பூ. அவருக்காக கோவில் கட்டும் அளவிற்கு சென்றவர்தாம் நம் தமிழ் ரசிகர்கள்! அந்த அளவிற்கு ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.

பிறந்தது வட மாநிலமாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேச மற்றும் எழுதும் திறமை உள்ளவர். தமிழக அரசியலில் நுழைந்த அவர், முதலில் திமுக வில் சேர்ந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான “சுந்தர்.சி” குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் “சுந்தர்.சி” என்ற பெயரில் நிறைய போலி அக்கவுண்ட்கள் இருக்கின்றனவாம்.

அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட்டு “இந்த பக்கம் ஒரு போலியான பக்கமாகும். யாரும் இதை பின்தொடராதீர்கள். நான் மறுபடியும் கூறுகிறேன். என் கணவருக்கு எந்த ஒரு சமூகவலைதள பக்கங்களும் கிடையாது. எனவே இது போன்ற போலி அசிக்கவுண்ட்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.