நடிகை ராய் லக்ஷ்மியின் காதலன் யார் தெரியுமா : பலரும் அறியாத உண்மை தகவல்!!

1092

நடிகை ராய் லக்ஷ்மியின் காதலன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் பல படங்களிலும் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மறறும் இந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் ‘நீயா 2’ படத்தில் ஜெய் உடன் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பட வாய்ப்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள இவர் சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்று, தனது நண்பர் வீர் ஆர்யன் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, உன்னுடன் பல ஆண்டுகளாக நான் பயணித்து வருகிறேன். இனிவரும் உன்னுடைய பிறந்தநாட்களையும் நான் உன்னுடன் கொண்டாட வேண்டும். உணர்வுப்பூர்வாமாகவும், அக்கறையுடனும், புத்திசாலித்தனத்துடனும், காதலுடனும், நட்புடனும் ( ஓ.. அதை நான் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.) என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது காதலன் இவர் தான் என லக்ஷ்மி ராய் கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்