என் மனைவி அழகாய் இருப்பது பலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை : ஷாக் கொடுத்த பிகில் அட்லி!

1821

ஷாக் கொடுத்த பிகில் அட்லி..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் இயக்குநராக இருப்பவர் அட்லி இவர் முதன்முதலாக இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனராக அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் ஆர்யா மற்றும் ஜெய் நடிப்பில் உருவான ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றதால் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக கண்டறியப்பட்டார்.

ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களை இயக்கினார் இந்த திரைப்படங்கள் ஆனது மாபெரும் வெற்றி பெற்று தற்போது இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக தற்போது அட்லி உள்ளார்.

மேலும் இயக்குனர் அட்லி மூன்றாவது முறையாக தற்போது நடிகர் விஜய்யை வைத்து பிகில் எனும் திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

தற்போது பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லி என் நிறத்தை வைத்து பலரும் என்னை கிண்டல் செய்தார்கள் எனவும் எனக்கு இதுபோன்ற அழகான மனைவி கிடைத்திருக்க கூடாது எனவும் பலரும் என் காதில் படும்படி கூறியுள்ளனர் எனவும் நிறமொரு தடையே இல்லை என தற்போது கூறியுள்ளார்.