நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு
தமிழில் ஆர்யா நடித்து வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதனைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து எந்திரன் திரைப்படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் ஹிந்தி மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார். அதன்பின் எமி ஜார்ஜ் பனாயோட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவருடைய வளைகாப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அந்த புகைப்படத்தை எமிஜாக்சன் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் எமிஜாக்சன் நீல நிற உடையில் அவர் பின்னால் பலூன்களை தொங்க விட்டவாறு இருந்தது. எனது ஆண் குழந்தை நல்ல நண்பன் மற்றும் சிறந்த குடும்பத்தினரிடம் கொண்டாடும் அழகான பிற்பகல் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனது மகன் பல அற்புதமான பெண்களை தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி என்றும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்வதாக தெரிவிக்கிறேன் என்றும் எமி ஜாக்சன் கணவர் கருத்துகளை பதிவு செய்தார். இந்நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.