என்னுடைய திறமைகள் கொஞ்சம் கொஞ்சமாக என்னைவிட்டு போவதை உணருகிறேன் : சாய்பல்லவி உருக்கம்!!

1204

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யாவுடன் நடித்த NGK படம் இம்மாத 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்தாலும், சாய் பல்லவியின் முதல் காதல் அவர் படித்திருக்கும் மருத்துவப் படிப்பு தான். அப்படிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக திரைத்துறையில் பிரபலமாகிவிட்டார்.

மருத்துவம் படித்திருப்பது தொடர்பாக சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், நான் ப்ராக்டிஸ் செய்ய மருத்துவமனைக்கு செல்வதில்லை. ஆனால் கண்டிப்பாக படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனக்கு இருந்த சில திறமைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய்க் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நாம் நன்றாகச் செய்த ஒரு விஷயம் இப்போது நமக்குச் சுத்தமாக வராத போது இதயம் நொறுங்குவதைப் போல இருக்கிறது.

இப்போது நான் ஒரு மருத்துவமனைக்குச் சென்றாலும் கண்டிப்பாக யாரும் என்னை நம்பப் போவதில்லை. வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்களே தவிர, நான் தரும் மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ஒரே டாக்டர் நான் தான் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.