யாருமில்லாத விமானத்தில் நடிகர் மாதவன்.. வருத்தமளிப்பதாக அவர் வெளியிட்ட பதிவு!!

467

மாதவன்..

நடிகர் மாதவன் தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளவர், இவர் நடிப்பில் மாறா திரைப்படம் கடைசியாக OTT-யில் வெளியானது.

இந்நிலையில் இவர் நடிப்பில் கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.

மேலும் அவரின் அந்த பயணத்தில் யாருமில்லாத விமானத்தில் தனி ஆளாக துபாய்க்கு சென்றுள்ளார். இது குறித்த அவரின் பதிவில் “இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக இருந்தது.

இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வேண்டுகிறேன். அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)