தோட்டா தெறிக்க, கையில் துப்பாக்கியுடன் கெத்தாக இருக்கும் தல அஜித்: வைரலாகும் Video !

515

அஜித்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித், தல நடிப்பு தவிர்த்து தனித் திறமைகள் அதிகமாகக் கொண்டவர். பைக் ரேஸ், கார் ரேஸ் என மோகம் கொண்டவர்.

அதில் புதிய மாடல் பைக் மற்றும் கார்கள் எது வந்தாலும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பது தான் அவரின் முதல் வேலை.

தற்போது துப்பாக்கி சுடுதல் மற்றும் அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் போன்றவற்றின் பயன்களைப் பற்றி கற்றுத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வீடு விட்டா ஷூட்டிங் , ஷூட்டிங் ஓவர் ஆச்சுன்னா டப்பிங் என்று தனது வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்த அஜித் கடந்த இரண்டு வருடங்களாக திடீரென்று பிஸ்டல் ஷூட்டிங் மீது பிரியம் கொண்டு அங்கேயும் நான்தான் பில்லா என்று மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

ஒரு விஷயம் Boss ! சினிமா ஷூட்டிங்னாலும் தல கிங், பிஸ்டல் ஷூட்டிங்னாலும் தல கிங் என்று அஜித் ரசிகர்கள் தலையை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட, தற்போது இவர் பிஸ்டல் ஷூட்டிங் பயிற்சி செய்வது போல Video ஒன்று இணையதளத்தில் செம்ம வைரல்.