திருமணத்திற்கு பின்பு ரகசியம் உடைத்த சமந்தா..
நடிகர் நாக சைதன்யாவின் இன்னொரு முகம் குறித்து அவரின் மனைவி நடிகை சமந்தா வெளிப்படையாக பேசி உள்ளார். நடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் அவர் தீவிரமாக நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடித்து வெளியான பேபி திரைப்படம் தெலுங்கில் ஹிட் அடித்தது. தமிழிலும் இவர் முக்கிய ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
நாக சைதன்யாவும் சமந்தாவும் சுமார் 8 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தின் போது இவர்கள் அறிமுகம் ஆனார்கள். அங்கு காதலிக்க தொடங்கி 2017ல் திருமணம் செய்தனர்.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சமந்தா தனது கணவர் குறித்து ரகசியங்களை குறிப்பிட்டார். என்னால் என் கணவர் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் என் கணவருக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். குழந்தை குறித்து இப்போது நாங்கள் யோசிக்கவில்லை.
என் கணவர் நாக சைதன்யாவிற்கு நான் முதல் மனைவி என்று கூட சொல்ல முடியாது. எப்போதும் அவர் தலையணையை அணைத்தபடிதான் படுத்து இருப்பார். தூங்கும் போதும் அதை கட்டிபிடித்துக் கொண்டுதான் இருப்பார். எப்போதும் அதனுடன்தான் இருக்கிறார்.
எப்போதும் எங்களுக்கு இடையில் ஒரு தலையணை இருக்கும். அவரை முத்தமிட வேண்டும் என்றால் கூட தலையணையை கேட்க வேண்டிதான் இருக்கும் . இந்த தலையணை பிரச்சனை குறித்து நான் நிறைய சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலும் சொல்ல மாட்டேன் என்று பேசி உள்ளார்.