சியான் விக்ரம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பெரிய வெற்றிகளை கொடுப்பவர்கள் வரிசையில் இருப்பவர் சியான் விக்ரம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்தவகையில் சியான் 60 தற்போது ரசிகர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வருகிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படமாக்கபட்டு வருகிறது. அப்படத்தில் விக்ரம் பணம் பறக்க புகைப்பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ் இணையத்தில் வைரலானது.
இதைதொடர்ந்து சியான் விக்ரம் பிச்சைக்காரன் வேடத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது. பிதாமகனையே மிஞ்சும் கதாபாத்திரமாக இருக்குமோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.