பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற சேரனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!

953

சேரனுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்  எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருக்க, மனிதத் தன்மையுடன் இருந்து மக்களின் மதிப்பை பெற்ற சேரன் வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் தனஞ்ஜெயன் ‘வெல்கம் பேக்’ சேரன் சார், நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை கொடுத்தீங்க என்னுடைய வாழ்த்துக்கள் சார். மேலும் உங்களுக்கான அடுத்த பணி காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இதற்காக சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் சொன்ன மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்தனா , இல்லையான்னு எனக்குத் தெரியல. என்ன பொறுத்தவரை வெற்றி, தோல்வி எல்லாத்தையும் தாண்டி இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்தது எனக்கு ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது.

இந்த உலகத்தில் நாம் அனுபவமாக இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை தந்தது பிக்பாஸ்.

இந்த தருணத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.நாம் என்ன தான் நாமாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழல் நம்மை அந்த மாதிரி வாழ விடாது.

அதையும் தாண்டி வாழ்ந்தால் நம்முடைய அதிர்ஷ்டம் என்றும் கூறினார். இந்த வகையில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த இந்த 90 நாட்கள் ரொம்ப பாக்கியம் செய்தவன் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

மேலும், சேரன் அவர்கள் டைரக்டர் தனஞ்ஜெயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தகட்ட பணிக்கு நான் தயாராக உள்ளேன் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.