சூப்பர் சிங்கரில் பாடும் பெண்ணை கடும் வார்த்தைகளால் தாக்கிய நபர்கள் : மற்றொரு தரப்பில் குவியும் ஆதரவு!!

1178

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பது மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல சீசன்களாக நடந்து வருகின்றது, ஆனால், அதன் எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் மட்டும் குறைந்ததே இல்லை.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் மதத்தை சார்ந்த ஒரு பெண் தற்போது பாடி வருகின்றார், இவரின் குரலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் இவருக்கு சமூக வலைத்தளங்களில் அவரின் மதம் சார்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இதில் என்ன இருக்கின்றது, இது 21ம் நூற்றாண்டு, தற்போதும் பெண்களை இப்படி பேசுவது நியாயமில்லை என்று ஆதரவும் தந்து வருகின்றனர்.