நடிகை சந்திரா..
விஜய் டிவியில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி காதலர்களை கவர்ந்த சீரியல் தான், “காதலிக்க நேரமில்லை”. இந்த சீரியலின் பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இதில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சந்திரா.
பிரஜினுக்கு ஜோடியாக நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதன்பின் பல தமிழ் மற்றும் மலையாள சீரியல்களிலும், பல திரைப்படங்களிலும் நடித்தார்.
38 வயதாகும் இவர் தற்போது ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். சில காலம் தமிழில் காணாமல் போனாலும் ரசிகர்கள் தொடர்ந்து சந்திரா உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் சொல்லும் விதமாக தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில், எங்களுடைய குடும்பங்களின் சம்மதத்துடனும், அவர்களின் ஆசிர்வாதத்துடனும் என்னுடன் சீரியலில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டியை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன்.
ரசிகர்களாகிய உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை” என்று கூறியுள்ளார். இவரின் திருமண அறிவிப்பை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.