ஆட்டோ ஓட்டும் இளம் நடிகை : கடும் வியப்பில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்!!

816

ஆட்டோ ஓட்டும் இளம் நடிகை

சின்னத்திரை நடிகை யஷாஸ்ரீ மஸுர்க்கர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஒரு வருஷமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்.

கார் என்னிடம் இருந்த போது காரை ஓட்ட ஓட்டுநர் தேவைப்பட்டார். அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.

எனக்கு சரி வர கார் ஓட்டத் தெரியாது. ஆட்டோ என்றால் செலவும் குறைவு. நானே ஒட்டிக் கொள்ளவும் முடியும். அதனால்தான் காரிலிருந்து ஆட்டோவுக்கு மாறினேன். இந்த ஆட்டோவை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை.

எனது டென்மார்க் நண்பர் இந்தியா வந்தபோது இந்தியாவைச் சுற்றி பார்க்க அவர் வாங்கியது. டென்மார்க் திரும்பும்போது எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு சென்றார். அதன் பின்னர் நான் தொடர்ந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து விட்டடேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவருடன் அவர் வளர்க்கும் நாயும் பயணம் செய்யுமாம். தற்போது அவரது ஆட்டோவில் பல வசதிகளை செய்து கொண்டிருக்கிறாராம்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதால் ரசிகர்கள் கடும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.