கவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? பிக்பாஸ் வரும் முன்பு நடந்த சம்பவங்கள்!!

858

கவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பு டிவி சீரியல் மற்றும் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காகத்தான் கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து விலகினார். ஆனால் படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகாமல் வருடக்கணக்கில் தள்ளிப்போனது. ஆரம்பத்தில் அவரை பல தயாரிப்பாளர்கள் தேடி வந்தாலும், முதல் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் புதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவர் ஒரு பிரபல இயக்குனரிடம் அசிஸ்டன்டாக சேர்ந்துவிட்டாராம் கவின். உதவி இயக்குனர் வேலையில் சரியாக உணவு, தூக்கம் இல்லாமல் கவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதிகம் ஒல்லியாகியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நட்புன்னா என்னனு தெரியுமா படம் ரிலீஸ் ஆனாலும் பெரிய படத்துடன் மோதியதால் வசூல் அதிகம் பெறவில்லை. அதன் பிறகு பிக்பாஸ் சென்ற அவர் ரசிகர்கள் பெரிய அளவில் கவர்ந்தாலும், தற்போது இறுதி கட்டத்தில் தானாக வெளியேறியுள்ளார்.