சமந்தா..
சமந்தாவும், அவரின் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவும் விரைவில் விவாகரத்து பெறப் போவதாக தெலுங்கு பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமதியான பிறகு சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார் சமந்தா. இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியது.
சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்துவிட்டனர். இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்க நாகர்ஜுனா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை.
நாக சைதன்யா தன் அப்பாவின் வீட்டிற்கு வந்துவிட்டார். சமந்தா தனியாக வசித்து வருகிறார். பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த ஜோடி பிரிவதை பார்த்து டோலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று அவ்வூடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து பேச்சு ஒருபக்கம் இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்து கோவாவில் கடற்கரை அருகே நிலம் வாங்கியிருப்பதாகவும், அங்கு பிரமாண்டமாக பண்ணை வீடு கட்டப்போவதாகவும் கூறப்படுகிறது.