“நீங்க ஒரு முஸ்லிமா இருந்துட்டு எப்படி….?” கர்ப்பமான வயிற்றை காட்டி போட்டோ ஷுட் எல்லாம் வேண்டாம் என்ற ரசிகர்- பாரதி கண்ணம்மா புகழ் பரீனா கொடுத்த பதிலடி!!

562

பரீனா..

பாரதி கண்ணம்மா சீரியல் படு ஹிட்டாக ஓடக் காரணம் வெண்பா என்ற கதாபாத்திரம் தான்.

அந்த கதாபாத்திரத்தை வைத்து பல டுவிஸ்ட்கள் செய்து தான் கதையை ஓட்டிவருகிறார் இயக்குனர்.

இப்போது சீரியலில் பாரதிக்கு லட்சுமி தான் கண்ணம்மாவின் மகள் எள்பது தெரிந்து அதற்கான பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என்ற யோசனையில் இப்போதே மக்கள் உள்ளனர். இதற்கு இடையில் சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்கும் பரீனா கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது.

ரசிகர்கள் வாழ்த்து கூறி வர பரீனாவும் விதவிதமான போட்டோ ஷுட்டாக நடத்தி வருகிறார்.

அண்மையில் ரசிகர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார், அதில் ஒருவர் வயிற்றை காட்டி போட்டோ ஷுட் நடத்த வேண்டாம் என்று கூற அதற்கு அவர்,

நம்மை சுற்றி நல்ல உள்ளங்களும், நல்ல எண்ணமும் இருந்தால் எப்போதும் ஒன்றும் ஆகாது என கூறியுள்ளார்.