பிரபாஸின் படத்தை ஓரங்கட்டி, பீஸ்ட் குறித்து வியந்து பதிலளித்த பூஜா ஹெக்டே..!

373

பூஜா ஹெக்டே..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்துள்ளார்.

அப்போது அவரின் அடுத்த படங்கள் குறித்து கூறுகையில் “நான் நடித்த ராதே ஷ்யாம் வெளியாகவுள்ளது, சர்க்கஸ் படத்தில் நடித்து வருகிறேன்.

மேலும் நான் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படம் குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன். அதுவும் தளபதி விஜய்யுடன்” என பதிலளித்துள்ளார்.