பிரவீனா..
நடிகை பிரவீனா ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.
பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.
அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரவீனா, தனது மகளுடன் மாடர்ன் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் யாரை விடுவது, யாரை பார்ப்பது என ரசிகர்கள் மாறி மாறி பார்த்து வருகின்றனர்.