போராட்டம் செய்ய அனுமதி கேட்கும் பாடகி சின்மயி : நியாயம் கிடைக்குமா?

1228

MeToo என்ற விவகாரம் தமிழ்நாட்டில் அதிகம் தெரியவர பாடகி சின்மயி காரணம். இவரது புகார் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியது.

அவர் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூற அவரை தொடர்ந்து சினிமாவில் உள்ள பல பெண்கள் தங்களுக்கு நடந்து கொடுமைகளையும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோர வேண்டும் என்று சின்மயி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.