‘சிவ சிவா’ டீஸர்..
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள ‘சிவ சிவா’ படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியானது.
இயக்குனர் சுசீந்திரன் சிம்புவை வைத்து கடைசியாக ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து ஜெய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றிவரும் திரைப்படம் ‘சிவ சிவா’. கிராமத்து கதையம்சத்தை வழக்கம் போல் அவரது பாணியில்,
ஆரம்பம் முதல் கடைசி வரை ‘ரத்தம் தெறிக்க’ விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் என்பது இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்தில் ஜெய், ‘சுப்ரமணியபுரம்’ பட ஸ்டைலில் தாடி வைத்து, கைலியை மடித்து கட்டி, கிராமத்து இளைஞர்ராக நடித்துள்ளார்.
மேலும் இதுவரை இவர் நடித்துள்ள படங்களை விட ஜெய்யின் வித்தியாசமான நடிப்பை இந்த படத்தில் பார்க்க முடியும் என்பதை டீசரை பார்த்தாலே தெரிகிறது. ‘சிவ சிவா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கிராமத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனை பற்றி சுசீந்திரன் பேசியுள்ளார்.
இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆக்ஷனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பால சரவணன், காளி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், சந்துரு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை Lendi Studio சார்பாக எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். வேல் ராஜ் படத்தொகுப்பில், ஜெய் என்பவர் இந்த படத்திற்கு தன்னுடைய விறுவிறுப்பான இசையால் படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.