வடிவேலு..
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கவுண்டமனி, செந்தில் ஆகியோருடன் இணைந்து ஏராளமான நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். இன்றும், வடிவேலுவின் டயலாக்கை வைத்து மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.
வடிவேலு நடிப்பில் வந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்த பாகம், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் உருவாக இருந்தது.
இந்தப் படத்தில் வடிவேலு நடிக்க மறுத்த நிலையில், புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதன் காரணமாக, வடிவேலு சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை.
அவருக்கு பட வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக விஜய் நடிப்பில் வந்த மெர்சல் பட த்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டி பல முறை கண்ணீர் விட்டு கதறியும் அழுதுள்ளார்.
தற்போது பல தடைகளை தாண்டி மீண்டும் படங்களில் நடிக்க இருந்த தடை நீக்கப்பட்டது. லைகா நிறுவனத்தின் 5 திரைப்படங்களில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் அவற்றில் ஒன்று சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆதித்யா டிவியில் பணியாற்றும் அகல்யா வடிவேலுவை சந்தித்த புகைப்படம், வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அதில் தலைவனை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு எனவும் கூறியுள்ளார்.
#VadiveluForLife ♥️♥️♥️thalaivaaa pic.twitter.com/Mr4qiRIY3U
— Akalya Venkatesan (@iamakalya) September 2, 2021