விஜய் – ஜெயம் ரவி சந்திப்பு… இணையத்தில் தீயாய் வைரலாகும் புகைப்படம்!!

546

விஜய் – ஜெயம் ரவி..

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக உருமாறி இருக்கிறார் தளபதி விஜய்.தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் ஜாஸ்தியாக இருக்கிறார்கள். இந்த வயதிலும் செம துடிப்பாக டான்ஸ் ஆடுகிறார். உலகெங்கிலும் இவரது டான்ஸ்க்காக ஃபேன்ஸ் இருக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் நடிர் விஜயை விடாமல் அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்தே வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார் விஜய்.

அப்போது நடிகர் ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோரை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியன் செல்வன் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் இன்னும் நீண்ட தலைமுடியுடன் ஜெயம் ரவி இருந்ததால் அவரை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் இன்னொரு புகைப்படத்தில் விஜய் கலாநிதி மாறனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தில் அராபிக் பாடல் ஒன்று இருப்பதாகவும், இந்த பாடல் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கான பாடல் எனவும் கூறப்பட்டது. இந்த அராபிக் பாடலை எழுதியவர் நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். அனிருத் இசையமைத்து வரும் இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.